ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற இந்தி திரைப்படம் “சந்தோஷ்“
ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற இந்தி திரைப்படம் “சந்தோஷ்“
ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற திரைப்படங்கள் பட்டியலில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தி திரைப்படமான சந்தோஷ் தேர்வாகியுள்ளது... உலக நாடுகள் சமர்ப்பித்த மொத்தம் 85 திரைப்படங்களில், 15 படங்கள் இந்தப் பிரிவில் ஆஸ்கார் விருதுப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சந்தியா சூரி இயக்கி ஷஹானா நடித்த இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குத் தகுதி பெற்ற திரைப்படங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது ரசிகர்களைக் கொண்டாட்டம் அடையச் செய்துள்ளது...
ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெறாத “லாபடா லேடீஸ்“-ஏமாற்றம்
சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட லாபட்டா லேடீஸ் திரைப்படம் விருது பட்டியலில் இடம்பெறத் தவறி விட்டது... கிரண் ராவ் இயக்கி அமீர்கான் தயாரித்த இத்திரைப்படம் மார்ச் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது... ஆஸ்கர் விருதுக்கு இத்திரைப்படம் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக, லாபடா லேடீஸ் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற திரைப்படங்கள் பட்டியலில் தேர்வாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.