`போலி ஓலா' - இரவில் பெண்ணுக்கு நேர்ந்த நடுங்க வைக்கும் சம்பவம் - Toxic Taxiகள் பகீர் பின்னணி
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில்,நிகிதா மாலிக் என்ற பெண் ஓலா வண்டியில் ஏறியுள்ளார். ஓலா செயலியின் கட்டாய ஓடிபி-யை கேட்காததால் சந்தேகம் அடைந்த பெண், பல்வேறு கேள்விகளை ஓட்டுநரிடம் எழுப்பியுள்ளார். எல்லாவற்றிற்கும் சாமர்த்தியமாக பதிலளித்த ஓட்டுநர், அந்த பெண்ணிடம் கூடுதல் கட்டணம் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த பெண், உடனடியாக வண்டியை விமானநிலையம் திருப்புமாறு வற்புறுத்தியுள்ளார். சிறிதும் செவிசாய்க்காத போலி ஓலா வாகன ஓட்டுநர், வாகனத்தை பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி 500 ரூபாய் கேட்டுள்ளார். அச்சம் அடைந்த நிகிதா, அவசர உதவி எண் 112ஐ தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் விரைவாக வந்து, ஓட்டுநரை கைது செய்தனர். இந்த சம்பவம்,பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலைகளை எழுப்பியுள்ளதாக வேதனை தெரிவித்த நிகிதா மாலிக், பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.