பிரியங்கா காந்திக்கு சீக்கிய கலவரத்தை நினைவூட்டும் பையை பரிசளித்த பாஜக எம்.பி
ஒடிசா மாநில பாஜக எம்பி அப்ராஜிதா சாரங்கி, நாடாளுமன்றத்திற்கு இன்று வந்த போது 1984 என சிகப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருந்த பை ஒன்றை எடுத்து வந்திருந்தார். நாடாளுமன்ற நுழைவு வாயில்
வழியாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வந்த போது அவரை பின் தொடர்ந்து சென்று அந்தப் பையை பிரியங்கா காந்திக்கு பரிசளித்தார். 1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலையை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற சீக்கிய படுகொலையை
நினைவூட்டும் விதமாக 1984 என சிகப்பு வண்ணத்தால் எழுதப்பட்ட பையை பரிசளித்தார். பிரியங்கா காந்தியும் அதனை தனது கையில் எடுத்துச் சென்றார்.
Next Story