மாரடைப்பில் இதய துடிப்பு நின்று 2 மணி நேரத்திற்கு பின் உயிர் வந்த ஆச்சர்யம் -ஆடிப்போன மருத்துவ உலகம்
ஒடிசாவில் இதயத்துடிப்பு நின்ற நபர் இரண்டு மணிநேரத்திற்கு பின் உயிர்பிழைத்தார்.ஒடிசாவை சேர்ந்த ராணுவ வீரர் சுபா காந்த், இதய பிரச்சனை காரணமாக,புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, இதயத்துடிப்பு நின்றது.இதனையடுத்து, நுரையீரல் மற்றும் இதயத்தை வேலை செய்ய வைக்கும் ஈசிபிஆர் சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில், நூற்றி இருபது நிமிடங்களுக்கு பிறகு அவரின் இதயம் மீண்டும் துடிக்க தொடங்கியது. தொடக்கத்தில் வழக்கத்திற்கு மாறாக துடித்த இதயம்,சிறிது நேரத்திற்கு பின் இயல்பு நிலையை அடைந்தது. தற்போது சுபா காந்த், அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story