மத்திய அரசுக்கு பறந்த நோட்டீஸ்... சுப்ரீம் கோர்ட் அதிரடி | Supreme Court

x

தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையர்களை கொலிஜியம் முறையில் நியமிக்கக்கோரிய மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜனநாயகத்தின்படி நடைபெறும் தேர்தல் சந்தேகத்துக்குகிடமின்றி நேர்மையாக இருக்க வேண்டுமென தெரிவித்தது. இதனிடையே, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை எதிர்த்து மத்தியப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்குர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையர் நியமனச் சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், பொதுநல மனுக்களுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்