“ஒருத்தரும் பொண்ணு கொடுக்கல தக்காளியால் இப்போ நான் லட்சாதிபதி’’-புது கார்ல பெண் தேட கிளம்பிய விவசாயி
நாட்டிலேயே தக்காளி விளைச்சல் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று..
அதுவும் பெங்களூரு தக்காளிக்கு எப்போதுமே தனி மவுசு தான்..
இந்நிலையில், கடந்த சில வாரங்களாகவே, பொதுமக்களை டென்ஷனாக்கி இருக்கும் முக்கிய பிரச்சினையாக இருப்பது தக்காளி விலையேற்றம்....
உள்ளூர் வாரச் சந்தைகளில், கிலோ பத்து ரூபாய் என்று விற்கப்பட்ட தக்காளி, கிலோ இருநூறு ரூபாய் வரை சென்றதெல்லாம் யாருமே எதிர்பார்க்காத ஒன்று..
அந்த வகையில், வெங்காயத்தை நறுக்கும் போது கண்ணீர் சிந்தும் இல்லத்தரசிகளின் கண்கள் தக்காளியின் விலையை கேட்டாலே கண்ணீர் சிந்துகிறது...
நடப்பாண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட திடீர் வெப்பநிலை அதிகரிப்பால்,
தக்காளி பயிர்களில் பூச்சி தாக்குதல்கள் அதிகரித்து அதன் விளைச்சல் பெரிதளவில் பாதிக்கப்பட்டது,
இதுவே தக்காளியின் விலையேற்றத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் சாமானிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், மறுபுறம் தக்காளி விற்பனையால் கொள்ளை லாபம் ஈட்டி வரும் விவசாயிகள் காட்டில் என்னமோ.. அடைமழை தான்.....
அந்த வகையில்,
தக்காளி மூலம் நாற்பது லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி
அடேங்கப்பா.... என ஆச்சரிப்பட வைத்துள்ளார்
கர்நாடகத்தை சேர்ந்த விவசாயி ஒருவர்..
சாமராஜநகர் மாவட்டம், கர்நாடகா
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்,
தனது 12 ஏக்கர் விளைநிலத்தில் தக்காளியை பயிரிட்டு இந்த சீசனில் சுமார் 40 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.