தரமற்ற சாலைகளால் மரணங்கள்.. இன்ஜினியர்களுக்கு சிறை? - மத்திய அமைச்சர் கட்கரி அதிரடி
இந்திய தொழில் துறை கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை 2030-க்குள் பாதியாக குறைப்பதே தங்கள் இலக்கு என்று குறிப்பிட்டார். கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 5 லட்சம் விபத்துகளில், 1 லட்சத்து 72 ஆயிரம் நபர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். தரமற்ற சாலைகள் விபத்துக்கு முக்கிய காரணம் என்றும், இதனை ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாக்க வேண்டும் என்றும் கூறினார். தரமற்ற சாலைகளால் ஏற்படும் விபத்துக்கு பொறுப்பான பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கட்கரி வலியுறுத்தினார்.
Next Story