நிர்மலா சீதாராமனை கொதிக்கவிட்ட ராகுல் காந்தி | nirmala sitharaman | budget 2024

x

மத்திய பட்ஜெட், உலகின் மூன்றாவது மிகப் பெரிய நாடாக இந்தியாவை உருவாக்கும் என்றும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள்இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டு, அவர்கள் புதிய நடுத்தர வர்க்க மக்களாக மாறி உள்ளனர் என்று கூறினார்.இந்த பட்ஜெட்டில் இளைஞர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், பட்டியலினத்தவர் தவிர, பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையிலான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.சிறு வியாபாரிகள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் வளர்ச்சி அடைவதற்கான புதிய வழி பட்ஜெட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.பாதுகாப்புத் துறையை தற்சார்பு கொண்டதாக மாற்றும் வகையில் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இந்த பட்ஜெட் தேசத்தை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்வதோடு நாட்டில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இந்த பட்ஜெட் மேலும் துரிதப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.மத்திய பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட் என ராகுல் காந்தி விமர்சித்துள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், இந்தியா கூட்டணியில் 37 கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டும், அவர்களால் 230 இடங்களைத் தாண்டி வெற்றிபெற முடியவில்லை என்றும், மாறாக பாஜக தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்று, தேர்தலுக்கு முந்தைய கூட்டணி மூலம் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது என்றும் கூறினார்.மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவித்திருப்பதால், மற்ற மாநிலங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று அர்த்தமல்ல என்றும் அவர் கூறினார்எந்தவொரு மாநிலத்தையும் விட்டு விட்டதாக தாம் கருதவில்லை என்றும், பிரதமர் மோடியின் திட்டங்கள் எல்லா மாநிலங்களுக்கும் சென்று சேர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்