மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி உத்தரவு

x

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, புதுச்சேரியை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் உள்ள 10 மண்டல ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், நபார்டு, சிட்பி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது, விவசாய கடன், சிறு தொழில் கடன், முத்ரா, பிரதமரின் விஸ்வகர்மா போன்ற மத்திய அரசின் திட்டங்களின் கீழ் கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தினார். மேலும், பால்வளம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற வேளாண் சார்ந்த நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்தி, அடித்தள அளவிலான வேளாண் கடன் வழங்கலில், மண்டல ஊரக வங்கிகள் தங்கள் பங்கை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்