விமான விபத்தில் இறக்கவில்லையா..? நேதாஜி மரண வழக்கு... சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு
விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர
போஸின் மரணத்தை விசாரிக்க கோரிய பொதுநல
மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம்
மறுத்துவிட்டது. இது தொடர்பான மனுவை
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல்
புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறக்கவில்லை
எனவும், அவரது மரணம் மர்மமாக உள்ளதால், இது
தொடர்பாக விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட
வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், அனைத்து
விவகாரங்களிலும் நீதிபதிகள் நிபுணர்கள் அல்ல
என்று தெரிவித்து, பொதுநல மனுவை தள்ளுபடி
செய்தது.
Next Story