அரசிடமே திருப்பி தருமாறு ராகுலுக்கு பறந்த கடிதம்

x

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வசம் இருக்கும் நேருவின் பழைய கடிதங்களை திருப்பி வழங்குமாறு பிரதமர் அருங்காட்சியகம் முறைப்படி கேட்டுள்ளது.

பிரதமர் அருங்காட்சியகம் உறுப்பினர் ரிஸ்வான் காத்ரி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் நேரு, எட்வினா மவுண்ட்பேட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்ளிட்டோருக்கு எழுதிய கடிதங்களை திருப்பி தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் நேரு கைப்பட எழுதிய தனிப்பட்ட கடிதங்கள் 1971 ஆம் ஆண்டில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த கடிதங்கள் 2008-ல் சோனியா காந்திக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது என கூறியிருக்கும் ரிஸ்வான் காத்ரி, எந்த காரணத்தினால் அவை சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்றும், அசல் கடிதங்களை மீட்டெடுக்க வேண்டும் அல்லது புகைப்பட நகல் அல்லது டிஜிட்டல் நகல்களை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆவணங்களை திருப்பி தருமாறு செப்டம்பர் மாதமே சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதாகவும், அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு கடிதம் எழுதியதாகவும் ரிஸ்வான் காத்ரி தெரிவித்துள்ளார். அரசின் சொத்தை அரசிடம் ஒப்படைக்க கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்