வெடிக்கும் நீட் தேர்வு சர்ச்சை... பெற்றோருக்கு மத்திய அரசு சொன்ன தகவல்

x

வெடிக்கும் நீட் தேர்வு சர்ச்சை... பெற்றோருக்கு மத்திய அரசு சொன்ன தகவல்

நீட் தேர்வு நடைமுறையை சீர்திருத்த மத்திய அரசு அமைத்த உயர்மட்ட குழு, பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுள்ளது. நீட், நெட் தேர்வுகளை வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடத்துவதை உறுதி செய்ய, இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது. தேர்வு செயல்பாட்டில் சீர்திருத்தங்களை பரிந்துரைப்பது, தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துவது மற்றும் தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்வதை நோக்கமாக கொண்டு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழு, வரும் ஜூலை 7ம் தேதி வரை மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில், ஆலோசனை, கருத்துகள் மற்றும் யோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. பரிந்துரைகளை வழங்க வேண்டிய இணையதள முகவரியையும் வழங்கியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்