எமனாக மாறிய இயற்கை; புது ஆபத்தில் சிக்கிய காஸா.. கதறும் மக்கள் - துடைத்தெறியப்படும் காஸா
- 45 நாட்களாக குண்டு மழையை மட்டுமே பார்த்து வந்த காசாவில்.. திடீரென பெய்தது அடைமழை..
- மழை வந்ததும் உற்சாகமடையும் சிறுவர், சிறுமியர்..சில்லென மாறும் வானிலை என இயல்பான மழைப்பொழிவாக அமையவில்லை இம்முறை பெய்த மழை..
- வாழ்ந்த வீட்டை விட்டு..சொந்த மண்ணை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு.. தலைவலியாகவே மாறியுள்ளது இந்த மழைக்காலம்..
- கட்டிடங்களில் சகல வசதிகளுடன் வாழ்ந்த மக்கள்...தற்போது தார்பாய், துணிகளால் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில் அடிப்படை வசதியின்றி தவித்து வருகின்றனர்..
- வலுவிழந்த கூடாரம் என்பதால்...மழை பொழிவின் போது அவை காற்றில் அடித்து செல்லப்படும் நிலை ஏற்படுகிறது..
Next Story