சமந்தாவை பிரிந்து சோபிதா துலிபாலாவை கரம் பிடித்தார் நாக சைதன்யா
தெலுங்கு பட உலகின் இளம் நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
காதல் மனைவியான நடிகை சமந்தாவை பிரிந்த பிறகு, நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலித்து வந்தார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் சிறப்பாக நடைபெற்றது. அதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. நாக சைதன்யா மற்றும் சோபிதா திருமணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நாகார்ஜூனா, தற்போது தான் தனது மகனை சந்தோஷமாக மீண்டும் பார்க்கமுடிகிறது என்றும் இது தங்களுக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story