ஒரே வாரத்தில் வழுக்கை... முடி மாயமான மர்மம் - பீதியில் உறைந்த கிராமம் - அதிர வைக்கும் நிஜ சம்பவம்
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில், பலருக்கு திடீரென தலைமுடி கொட்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாண்ட்கான், கல்வாட், ஹிங்க்னா கிராமங்களில் கடந்த ஒரு வாரத்தில், சிறுவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோருக்கு திடீரென தலைமுடி உதிர்ந்தன. சிலருக்கு வழுக்கை தலையானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதிக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தோல் நோய் நிபுணர் விரைந்து பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்தனர். பூஞ்சை தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேதிக்கப்படும் நிலையில், அப்பகுதியில் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
Next Story