தமிழ்நாடு முழுவதும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்.. தேதி குறித்த இந்திய கம்யூனிஸ்ட் | Mutharasan
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, வருகிற 8ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், மத்திய பட்ஜெட் பொதுவாக இல்லை என்றும், ஒருசார்புடன் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். 2 ஆண்டுகளாக பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கு மத்திய நிதி அமைச்சர் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story