நடுக்கடலில் நடந்த கோர விபத்து...தத்தளித்த பல உயிர்கள்... 13 பேர் துடிதுடித்து பலி

x

நடுக்கடலில் நடந்த கோர விபத்து...தத்தளித்த பல உயிர்கள்... 13 பேர் துடிதுடித்து பலி - குலைநடுங்க விடும் திக் திக் காட்சிகள்

மும்பையில் மின்னல் வேகத்தில் சென்ற கடற்படை படகு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் எலிபேண்டா தீவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு நீலகமல் என்ற படகு திரும்பியுள்ளது. அப்போது அப்பகுதியில் வேகமாக சீறிப்பாய்ந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான படகு நீலகமல் படகு மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. படகிலிருந்த பயணிகள் தத்தளித்து உயிருக்கு போராடிய வேளையில் கடற்படை, கடலோர காவல்படை, மும்பை போலீஸ் மற்றும் ஹெலிகாப்டர்கள் அவர்களை மீட்க விரைந்தது. கடலில் உயிர்காக்கும் ஜாக்கெட்களுடன் தத்தளித்தவர்கள் முதற்கட்டமாக மீட்கப்பட்டனர். இதற்கிடையே சிலர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். இந்த கோர விபத்தில் பொதுமக்களில் 10 பேர், கடற்படைக்கு சொந்தமான 3 வீரர்கள் என 13 பேர் உயிரிழந்து இருப்பதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், மும்பை போலீசும், கடற்படையும் இணைந்து விசாரிக்கும் எனவும் கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்