கணவர் தொல்லை - 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
கர்நாடக மாநிலம் கேஜிஎப் அருகே காமசந்திரா பகுதியைச் சேர்ந்த திரிவேணி என்பவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்தடுத்து பெண் மற்றும் ஆண் இரண்டு குழந்தை பிறந்த நிலையில், கணவன் மதுபோதைக்கு அடிமையானதால், தொடர்ந்து பிரச்சினை நீடித்துள்ளது. குழந்தைகள் எதிர்காலம் கருதி திரிவேணி கூலி வேலைக்குச் சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்த நிலையில், அவரது சம்பளத்தையும் வாங்கி கணவர் மணி மது அருந்தி தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு பெற்ற குழந்தை என்றும் பாராமல், இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொன்று, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.Mother commits suicide after killing 2 children due to husband's harassment