நடிகரின் திடீர் ஆக்ரோஷம்.. பத்திரிகையாளரை சந்தித்து மன்னிப்பு கேட்ட மோகன் பாபு
தன்னிடம் அடி வாங்கி காயமடைந்த செய்தியாளரை, நடிகர் மோகன்பாபு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
நடிகர் மோகன் பாபுவுக்கும், அவரது மகன் மனோஜ் மன்சுவுக்கு இடையிலான சொத்து பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. இதுதொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை, மோகன் பாபு விரட்டி அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காயமடைந்த பத்திரிகையாளருக்கு, கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் போலீசில் புகார் அளித்தார். இதன்படி வழக்கு பதிந்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் மோகன் பாபுவுக்கு சம்மன் அனுப்பினர். இந்நிலையில் நடிகர் மோகன் பாபு, அவரது மூத்த மகனும், நடிகருமான மஞ்சு விஷ்ணு ஆகியோர் காயமடைந்த செய்தியாளரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது, செய்தி சேகரித்தபோது, தான் அடித்ததுற்கு மோகன் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.