#BREAKING || யாருமே நினைத்துக்கூட பார்க்காத நிகழ்வு.. பறந்த உத்தரவு.. மத்திய அரசு அதிரடி
மைக்ரோசாப்ட் குளறுபடியால், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல். பயணிகளுக்கு கூடுதல் இருக்கை, தண்ணீர், உணவு வழங்குமாறு விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு உத்தரவு. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பயணிகளின் பொறுமை, ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது - மத்திய அரசு. "பயணிகளின் அசௌகரியத்தை குறைப்பதற்கும், நலனை உறுதி செய்வதற்கும் விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது". விமானத்தின் நிலை குறித்த தகவல்களை பயணிகளுக்கு தெரிவிக்க விமான நிறுவனங்களுக்கு உத்தரவு. பிரச்சினைக்கு தீர்வு காண மைக்ரோசாப்ட் உடன் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது - மத்திய அரசு
Next Story