ஆண்களே உஷார்.. பர்த்டே பார்ட்டிக்கு "NO" சொன்ன கணவனை அடித்து கொன்ற மனைவி -குலை நடுங்க வைத்த பயங்கரம்

x

துபாயில் தனது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பிய மனைவி, அதற்கு மறுப்பு தெரிவித்த கணவனை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் 36 வயது ரேணுகா... இவர் தனது பிறந்த நாளை துபாயில் கொண்டாட விரும்பிய நிலையில், அதற்கு கணவர் நிகில் கண்ணா ஒப்புக் கொள்ளவில்லை... திருமண நாளுக்கும் கணவர் நல்ல பரிசு வழங்கவில்லை என்றும், உறவினர் பிறந்த நாளுக்கு டெல்லி செல்ல விரும்பிய தன்னை அழைத்துச் செல்லவில்லை எனவும் மனைவி மனதிற்குள்ளேயே குமுறிய நிலையில், இது குறித்து எழுந்த சண்டையில், ரேணுகா நிகிலை அடித்தே கொலை செய்துள்ளார்... இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்ரனர்...


Next Story

மேலும் செய்திகள்