Mehul Choksi arrested in Belgium | 14000 கோடி... மோசடி... மெகுல் சோக்சி அதிரடி கைது

x

பஞ்சாப் நேனஷல் வங்கியின் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி மோசடி விவகாரத்தில் தப்பியோடிய தொழிலதிபர் மெகுல் சோக்சி mehul choksi பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரான

குஜராத்தை சேர்ந்த ​வைர வியாபாரி மெகுல் சோக்சி, கடந்த 2018ம் ஆண்டு, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் மூலம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர் மீது ஜாமினில் வெளிவர முடியாத 2 வாரண்ட்டுகளை மும்பை நீதிமன்றம் பிறப்பித்தது. இந்நிலையில் இந்தியாவைவிட்டு தப்பியோடிய மெகுல் சோக்சி, பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்