`வெள்ளை தொப்பி' காதலனுடன் தனியாக இருந்த பிரபல பெண் யூடியூபர் மரணம்.. பிளாட்டில் என்ன நடந்தது?
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மாயா கோகி, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே யூட்யூபில் தன்னுடைய பெயரில் ஒரு பக்கத்தைத் தொடங்கி உணவு, ஆடைகள் குறித்த வீடியோக்களை அடிக்கடி பதிவிடும் வ்லாகராக இருந்து வந்து இருக்கிறார்.
இதன் மூலம் சமூக வலைதள பக்கத்தில் நன்கு அறியப்படும் நபராக இருந்து வந்து இருக்கிறார். இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஆரவ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை பெங்களூர் இந்திரா நகரில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் அறை எடுத்து இருவரும் தங்கி உள்ளனர். ஏதோ திட்டமிட்டு வந்திருக்கலாம் என்ற வகையில் முகத்தை மறைக்கும் வகையில் வெள்ளை நிற தொப்பி அணிந்து வந்து மாயா கோகியுடன் அறை எடுத்துத் தங்கி இருக்கிறார் ஆரவ்.
இந்த நிலையில் சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கி இருந்த மாயா கோகி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாயா கோகியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சர்வீஸ் அபார்மெண்ட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இருவரும் வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதில் ஆரவ்வின் முகம் சரியாகத் தெரியாத வகையில் முகத்தை மறைத்து வெள்ளை நிற தொப்பியை ஆரவ் அணிந்து வந்திருப்பது பதிவாகி உள்ளது.
மாயா கோகியை கொலை செய்யும் நோக்கில் தான் வந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாயா கோகியை கொலை செய்த ஆரவ் ஒரு நாள் முழுவதுமாக அவரது உடலுடன் அறையிலிருந்தது தெரியவந்துள்ளது.
உடலைத் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்த ஆரவ் முடிவு செய்து இருக்கலாம் எனவும் ஆனால் அந்த முடிவை எடுக்காமல் அறையிலிருந்த வெளியே வந்த ஆரவ் ஆட்டோ மூலமாகத் தப்பிச் சென்று இருக்கிறார் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.