கடைசி நேரத்தில் மணமகளை மாற்றிய மணமகன்... இந்த காரணத்திற்காகவே..? - நொடியில் பறிபோன 7 லட்சம்
கடைசி நேரத்தில் மணமகளை மாற்றிய மணமகன்... இந்த காரணத்திற்காகவே..? - நொடியில் பறிபோன 7 லட்சம்
உணவு வழங்க தாமதமானதால் திருமணத்தை நிறுத்திய மணமகன் தன் உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சிகர சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது... சந்தவுலியில் மெஹ்தாப் என்பவருக்கும் இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில்,
திருமணத்தன்று உறவினர்கள் குவிந்ததால் அவர்களுக்கு உணவு வழங்கி விட்டு, மணமகனுக்கு உணவு வழங்குவதில் தாமதமானதாக தெரிகிறது. இதனால் மணமகனின் நண்பர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது... கோபமடைந்த மணமகனும், அவரது பெற்றோரும் மணமகள் பெற்றோரை வசை பாடியுள்ளனர். பெரியவர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் முடியாத நிலையில், அதேநாளில் மணமகன் தன் உறவுக்கார பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மணமகள் குடும்பத்தார் போலீசில் புகாரளித்த நிலையில் 7 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் மணமகன் குடும்பத்தாருக்கு ஒன்றரை லட்சம் தந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து இருதரப்பையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.