"இந்தியாவின் தலைவிதியை வடிவமைத்த உண்மையான அரசியல்வாதி" - சோனியா காந்தி உருக்கம் | Manmohan Singh

x

மன்மோகன் சிங்கின் மறைவு தமக்கு தனிப்பட்ட இழப்பு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் அவசர செயற்குழு கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் இந்தியாவின் தலைவிதியை வடிவமைத்த உண்மையான அரசியல்வாதி மன்மோகன் சிங் என்றும் அவர் நினைத்தது போல் வளமான ஒன்றுபட்ட இந்தியாவை கட்டியெழுப்ப உழைப்போம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் உரையாற்றிய சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு ஒளிமயமான வழிகாட்டியாக விளங்கிய மன்மோகன் சிங்-கின், கருணை, தொலைநோக்கு பார்வையால் லட்சக்கணக்கான இந்தியர்கள் வாழ்க்கை மாறியிருப்பதாக தெரிவித்தார். நண்பராகவும், தத்துவவாதியாகவும், வழிகாட்டியாகவும் விளங்கிய மன்மோகன் சிங்கின் மறைவு தமக்கு தனிப்பட்ட இழப்பு என சோனியா காந்தி உருக்கமாக தெரிவித்தார். தேசத்தில் அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்