மன்மோகன் சிங் தகனத்தில் என்ன நடந்தது? - ``மோடியை இந்தியா ஒரு போதும் மன்னிக்காது’’ - காங். கண்டனம்

x

தலைநகர் டெல்லியில் உள்ள, யமுனை நதிக்கரையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூத உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கின் போது மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கு உரிய இடத்தையும் மரியாதையையும் அளிக்கவில்லையென்றும், மன்மோகன் சிங் குடும்பத்தினரை புறக்கணித்த தூர்தர்ஷன் தொலைக்காட்சி மோடி மற்றும் அமித்ஷாவையே காட்சிபடுத்தியதாகவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில், பாஜகவினர் மலிவான அரசியல் செய்வதாகவும், மன்மோகன் சிங் இறுதி சடங்கின் போது தரக்குறைவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மன்மோகன் சிங் இறுதிச்சடங்கை தரக்குறைவாக செய்ததற்காக, பிரதமரையும் அவரது அரசாங்கத்தையும் இந்தியா ஒருபோதும் மன்னிக்காது என பாஜகவினரை விமர்சனம் செய்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்