மணிப்பூர் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாதது துரதிஷ்டவசமானது என ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது...

x

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி சமூகத்தினர் இடையிலான மோதல் வன்முறையாக மாறியதில் கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக ஓராண்டுக்கு பிறகு அங்கு இயல்பு நிலையும் அமைதியும் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும் இரு சமூகங்களுக்கு இடையே மோதல் சம்பவங்கள் அரங்கேற துவங்கியிருப்பதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு, மணிப்பூர் வன்முறை பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாதது துரதிஷ்டவசமானது எனவும் நடைபெற்று வரக்கூடிய வன்முறை சம்பவங்களால் அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. வன்முறையின் ஒரு அங்கமாக பெண்கள் மற்றும் குழந்தைகளை பிடித்து வைத்துக் கொண்டு அவர்களை கொலை செய்யும் மனிதநேயமற்ற கொடூரமான இரக்கமற்ற செயல்களை ஆர்எஸ்எஸ் வன்மையாக கண்டிப்பதாகவும், இத்தகைய செயல்கள் மனித நேயத்திற்கு எதிரானது மட்டுமின்றி கோழைத்தனமானது எனவும் விமர்சித்துள்ளது.

இந்த பிரச்சனையை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்