மணிப்பூரில் குழுவாக சேர்ந்து டீச்சர் கொடூர பலாத்காரம்.. தப்ப முயன்றபோது செய்தது தான் மிருகத்தனத்தின் உச்சம்

x

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதமேயந்திய மர்ம நபர்களால் பள்ளி ஆசிரியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில் குகி மற்றும் மெய்தி ஆகிய பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இது கலவரமாக வெடித்ததில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையைத் தொடர்ந்து 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து சென்றுள்ளனர். ராணுவம் உள்ளிட்ட உயர் பாதுகாப்பு படையினர் மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜிரிபாம் மாவட்டத்தில் ஆயுதமேந்திய மர்ம நபர்கள், குகி பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் பலருடைய வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில், குகி சமூகத்துடன் தொடர்புடைய மார் பழங்குடியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை வீட்டுக்குள் இரவு நேரத்தில் புகுந்த மெய்தி ஆயுதக் குழுவினர், அவரை பாலியல் வன்கொடுமை செய்து, தப்ப முயன்றபோது காலில் துப்பாக்கியால் சுட்டு, தீவைத்து எரித்துள்ளனர். பின்னர், வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளை அடித்து விட்டு அவர்கள் சென்று விட்டனர். மறுநாள் ஆசிரியையின் கணவர் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்