மகேஷ்குமார் அகர்வால் IPS மத்திய பணிக்கு மாற்றம் - யார் இவர்? | mahesh kumar agarwal

x

மகேஷ்குமார் அகர்வால் IPS மத்திய பணிக்கு மாற்றம் - யார் இவர்?

தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை டி.ஜி.பி.யாக உள்ள மகேஷ்குமார் அகர்வால் மத்திய பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எல்லை பாதுகாப்பு படை கூடுதல் இயக்குநர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மகேஷ்குமார் அகர்வால் இந்த பதவியில் 4 ஆண்டுகள் வரை இருப்பார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மகேஷ்குமார் அகர்வால் தமது 22 வயதில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

தேனி , தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்பியாக பணிபுரிந்துள்ள அவர் , சென்னையில் போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட பல பதவிகளில் பணியாற்றி உள்ளார். அவர் சி.பி.ஐ. அதிகாரியாக 10 ஆண்டுகள் பணியாற்றி மீண்டும் சென்னைக்கு திரும்பினார்.


Next Story

மேலும் செய்திகள்