மகாராஷ்டிராவில் வெடித்த வன்முறை வெறியாட்டம்.. பதற்றம்.. போலீசை நடுங்க விட்ட போராட்டக்காரர்கள்

x

மத்திய மகாராஷ்டிராவின் பர்பானி நகரத்தில் வன்முறை வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பர்பானி ரயில் நிலையம் அருகே அம்பேத்கர் சிலையில் வைக்கப்பட்டு இருந்த இந்திய அரசியலமைப்பின் பிரதி சேதப்படுத்தப்பட்டதாக போராட்டம் நடந்தது. அப்போது, போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அதற்கு போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் உருவான நிலையில், போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்