மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்.. ஷிண்டேவுக்கு புது பொறுப்பு - முதல்வர் யார்?

x

மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்.. ஷிண்டேவுக்கு புது பொறுப்பு - முதல்வர் யார்?

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பாஜகவின் மகாயுதி கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க மகாயுதி கூட்டணி தயாராகி வரும் நிலையில், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டங்கள் தனித்தனியே நடைபெற்றன. அந்த வகையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவசேனா கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக, ஏக்நாத் ஷிண்டே அனைவராலும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வர் யார் என்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், இன்றைக்குள் கூட்டு முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்