`இறக்குமதி சரக்கு' ஒற்றை வார்த்தையால் வெடிக்கும் அரசியல் களம்... "இதில் காங்கிரஸ் நிலைபாடு என்ன?"

x

`இறக்குமதி சரக்கு' ஒற்றை வார்த்தையால் வெடிக்கும் அரசியல் களம்... "இந்தில் காங்கிரஸ் நிலைபாடு என்ன?"

மகாராஷ்டிராவில் பெண் தலைவரை இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு என உவமையில் பேசியதற்கு சிவசேனா உத்தவ் அணி எம்.பி. மன்னிப்பு கேட்டார்.

மகாராஷ்டிராவில் பாஜக செய்தி தொடர்பாளரான சாய்னா என்.சி., கட்சியிலிருந்து விலகி சிவசேனா ஷிண்டே அணியில் இணைந்துவிட்டார். மும்பாதேவி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கு கருத்து தெரிவித்த சிவசேனா உத்தவ் அணியை சேர்ந்த எம்.பி. அரவிந்த் சாவந்த், வாழ்க்கையை பாஜகவில் கழித்த சாய்னா, சீட் கிடைக்காததால் இப்போது கட்சி மாறியிருக்கிறார், இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு இங்கு வேலைக்காகாது என கூறியிருந்தார். அரவிந்த் சாவந்த் பேச்சு தரம் தாழ்ந்தது என விமர்சனம் செய்த சாய்னா போலீசில் புகாரளித்தார். பல தரப்பில் எதிர்ப்புகள் எழுந்த வேளையில் அரவிந்த் சாவந்த், சாய்னாவை தவறான நோக்கத்தில் விமர்சிக்கவில்லை, சாய்னா தொகுதிக்கு வெளிநபர் தானே என்றார். தொடர்ந்து, தனது கருத்து காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரது கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத், இந்த விவகாரத்தில் தேவையில்லாது சர்ச்சை உருவாக்கப்படுகிறது என்றார். தொடர்ந்து, காங்கிரஸ் நிலைபாடு என்ன...? என சாய்னா கேள்வியை எழுப்பியுள்ளதால் மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் இறக்குமதி சரக்கு சர்ச்சை தொடர்ந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்