பிரசவ வார்டில் பற்றிய தீ.. நொடிப்பொழுதில் தப்பிய150 உயிர் - காரணம் என்ன?
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்தை தொடர்ந்து, 150க்கும் மேற்பட்ட நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். குளிரூட்டப்பட்ட பிரசவ வார்டில் தீ விபத்து ஏற்பட்டு புகை வெளியேறியது.
மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், நோயாளிகள் வெளியேற்றப்பட்டு, மற்றொரு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Next Story