பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதால் அசுர வேகத்தில் மோதிய கார்... டாக்டர் பலி

x

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காரின் பிரேக்கிற்குப் பதிலாக ஆக்சிலேட்டரை தவறுதலாக அழுத்தியதால் விபத்தில் மருத்துவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர் முகேஷ் திவாரி ரசோமா சதுக்கத்தில் உள்ள சிக்னலில் தனது காரை பிரேக் அழுத்தி நிறுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை தவறுதலாக அழுத்தியதால் சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் மற்றொரு கார் மீது மோதியது. இதில் மருத்துவர் முகேஷ் திவாரி படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்