``மனைவியைப் பார்க்கக் கூடாதா..?'' L&T தலைவரை வறுத்தெடுத்த பெண் பிரபலம்
ஞாயிற்றுக்கிழமை கூட ஊழியர்கள் பணிபுரிய வேண்டும் என கருத்து தெரிவித்த எல் அண்ட் டி (L&T) நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமணியனுக்கு முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா (jwala gutta) கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஏன் ஒருவர் அவரது மனைவியைப் பார்க்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார். எஸ்.என்.சுப்ரமணியனின் கருத்தைப் பெண்கள் மீதான வெறுப்பாகப் பார்ப்பதாகவும், நன்கு படித்து உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற அச்சுறுத்தும் கருத்துகளை தெரிவிப்பது கவலை அளிப்பதாகவும் ஜுவாலா கட்டா கூறியுள்ளார்.
Next Story