மிரட்டல் காரணமாக காதல் ஜோடிகள் எடுத்த அதிர்ச்சி முடிவு
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கட்கேசர் நாரப்பள்ளியில் ஸ்ரீராம் என்ற இளைஞர் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அடிக்கடி வந்து சென்ற 12ம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்து இருக்கின்றனர். இதனிடையே மாணவியின் உறவினரான சின்ட்டு என்பவருக்கு இருவரின் காதல் தெரியவந்து இருக்கிறது.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட சின்ட்டு மாணவியின் காதலை அவர்களது பெற்றோர்கள் வீட்டில் சொல்லி விடுவதாகக் கூறி அடிக்கடி மிரட்டி வந்து இருக்கிறார். இதனால் பயந்து போன மாணவி கூறியதன் படி ஸ்ரீராம் அடிக்கடி சின்ட்டுவிற்கு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வரை கடன் வாங்கி கொடுத்து வந்து இருக்கிறார்.தொடர்ந்து பல விதங்களில் மிரட்டி வந்ததால் இருவரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் இருவரும் எடுத்த முடிவுதான் தற்போது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்து இருக்கிறது
ஸ்ரீராம், ஹைதராபாத் மெடிப்பள்ளியில் உள்ள டிராவல் ஏஜென்சியில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து இருக்கிறார். இருவரும் காரில் கனாபூர் பகுதிக்கு வந்த நிலையில் அங்குக் காரை நிறுத்தி இருக்கின்றனர். பின்னர் இருவரும் தங்கள் மீது பெட்ரோலை உற்றிவிட்டு தீ வைத்து இருக்கின்றனர்.
தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதில் இருவரும் வலி தாங்க முடியாமல் கதறி இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாத ஸ்ரீராம் தன் மீது தீப்பிடித்தபடியே காரில் இருந்து வெளியே வந்து அருகில் உள்ள பிளாட்பாரமில் எரிந்த நிலையில் உயிரிழந்தார்.
கார் திடீரென தீப்பிடித்து எரிவதைக் கண்ட பொது மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்த நிலையில் காரினுள் கரிக்கட்டையாக இருந்த மாணவியின் சடலத்தையும் மீட்டனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் முதலில் விபத்து என்று கருதினர். பின்னர் தான் அது தற்கொலை என போலீசாருக்கு தெரிய வந்து இருக்கிறது. மேலும் ஸ்ரீராம் வீட்டில் நடத்திய சோதனையின் போது அவர் எழுதிய தற்கொலை கடிதத்தை எடுத்துள்ளனர். அதில் தங்கள் இருவரையும் மிரட்டிய சின்ட்டு உட்பட சில பெயர்களையும், தாங்கள் இருவரும் எப்படி எல்லாம் மிரட்டப் பட்டோம் என்பது குறித்தும் தற்கொலை கடித்ததில் விரிவாக ஸ்ரீராம் எழுதியது தெரியவந்து இருக்கிறது
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் காதல் ஜோடியின் தற்கொலைக்குக் காரணமான மாணவியின் உறவினரான சின்ட்டு உள்ளிட்ட சிலரைக் தீவிரமாகத் தேடி வருகின்றனர்