லாரி டயரில் சிக்கிய தலைமுடி..நகர்த்தாமல் மீட்க முடியாது.. நகர்த்தினால் உயிரே போகும்..மீட்டது எப்படி?

x

லாரி டயரில் சிக்கிய தலைமுடி..நகர்த்தாமல் மீட்க முடியாது.. நகர்த்தினால் உயிரே போகும்..மீட்டது எப்படி? திக்..திக்.. போராட்டம்


லாரியின் அடியில் விழுந்து, தலைமுடி டயருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய பெண்னை... மத்திய அமைச்சர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

மத்திய உள்துறை இணை அமைச்சர் பாண்டி சஞ்சய் குமார் தெலங்கானாவில் சுற்றுப்பயணம் செய்திருந்தபோது, அவர் கண்டு பதறிப்போன விபரீதச் சம்பவம்தான் இது...

தெலங்கானா மாநிலம் கரீம்நகரின் ஹுசூராபாத் பகுதியில், லாரியின் அடியில் விழுந்து, தலைமுடி டயருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய பெண்னை கண்டு பதறிப்போய் சாலையில் இறங்கி ஓடியிருக்கிறார்...

தலைமுடி டயருக்குள் சிக்கியதால், ஏதும் செய்ய முடியாத நிலையில், உயிர் பயத்துடன் பெண் அலறிக் கொண்டிருந்தது நிலைமை மோசமாக்கி இருக்கிறது...

உடனே, ஜாக்கி கருவியை வரவழைத்து, லாரியின் டயரை மேலே உயர்த்தி பெண்ணை மீட்டிருக்கின்றனர் அமைச்சருடன் வந்தவர்கள்...

அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெண்னை அமைச்சர் பாண்டி சஞ்சய் குமார் அனுப்பி வைத்த நிலையில், அவருக்கான சிகிச்சையை தானே மேற்கொள்வதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்