"மம்தாவ நம்ப முடியாது - பாஜகவுக்கு ஜம்ப் அடிச்சிருவாங்க" - I.N.D.I.A.யில் புயலை கிளப்பிய காங்., MP
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் - காங்கிரஸ் இடையே சீட் பங்கீட்டு மோதலால் கூட்டணி அமையவில்லை. மாநிலத்தில் காங்கிரசும், இடதுசாரியும் கூட்டணி அமைத்து போட்டியிருக்கிறது. இதனால் கோபமாக இருக்கும் மம்தா பானர்ஜி, தேசிய அளவில்தான் இந்தியா கூட்டணி, மாநிலத்தில் இல்லை என பிரசாரம் செய்கிறார். இந்த சூழலில், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைந்தால் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்போம் என மம்தா பானர்ஜி சொன்னது இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது. இதுகுறித்து மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய போது, மம்தா பானர்ஜியை எல்லாம் நம்ப முடியாது, கூட்டணியை விட்டு வெளியேறி, அவர் மீண்டும் பாஜக கூட்டணியில் கூட இணையலாம் என்றார். மத்தியில் காங்கிரஸ் - இந்தியா கூட்டணி ஆட்சியமையும் என்ற ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக இருக்கும் என்றார்.