44நாட்கள்! 7கட்டங்கள்! இந்தியாவில் இதுவே இரண்டாவது முறை!அடுத்த 80 நாட்களுக்கு ஆரம்பிக்கப்போகும் ஹீட்
18வது நாடாளுமன்ற தேர்தல், ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் 44 நாட்களுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மற்ற பொதுத்தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இதுவே, இரண்டாவது பெரிய தேர்தல் காலமாக கருதப்படுகிறது. இதற்கு முன், 1951ல் நடந்த நாட்டின் முதல் தேர்தல் சுமார் 4 மாதங்களுக்கு நடைபெற்றது. மேலும், தேர்தல் அட்டவணை அறிவித்த நாள் முதல் வாக்கு எண்ணிக்கை வரை சுமார் 82 நாட்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story