நாட்டை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை - குற்றவாளிக்கு மரண தண்டனை கேட்கும் மேற்கு வங்க அரசு
நாட்டை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை - குற்றவாளிக்கு மரண தண்டனை கேட்கும் மேற்கு வங்க அரசு
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க கோரும், மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனு தாக்கல் செய்த நிலையில், மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கு முன் சிபிஐ, மருத்துவரின் பெற்றோர் மற்றும் குற்றவாளி தரப்பு வாதங்கள் கேட்கப்படும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேசமயம், மரண தண்டனை விதிக்க கோரும் மேற்கு வங்க அரசின் மனு, விசாரணைக்கு உகந்தது அல்ல என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
Next Story