தோண்ட தோண்ட சடலங்கள்... நெஞ்சை கிழிக்கும் மரண ஓலம்... கேரள அரசு எடுத்த திடீர் முடிவு

x

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில், அடையாளம் தெரியாத உடல்களை பொது மயானத்தில் புதைக்க தேவையான வசதிகளை, கேரள அரசின் வழிகாட்டுதல்படி உள்ளாட்சி அமைப்புகள் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்பற்றா நகராட்சி, வைத்திரி, முட்டில், கன்யாம்பட்டா, விஷ்டம்தாரா, தொண்டர்நாடு, எடவாகா, முள்ளங்கொல்லி ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் தகனம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேப்பாடி கிராம பஞ்சாயத்தில் பல்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத 74 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் உடல்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்