உருக்குலைந்த வயநாடு.. பரபரவென களத்தில் இறங்கிய உதவிக்கரங்கள் - பட்டியல் வெளியிட்ட கேரளா முதல்வர்

x

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் தலைவர்கள், நிறுவனங்கள், திரைத்துறையினர் அறிவித்த உதவிகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் பட்டியலிட்டுள்ளார்.

கேரள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வயநாட்டில் பாதிக்கப்பட்டோருக்கு நூறு வீடுகள் கட்டித் தரப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளதாக தெரிவித்தார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் 100 வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்துள்ளதாகவும் கூறினார். இதே போன்று, பல்வேறு நிறுவனங்கள் வீடுகளை கட்டிக்கொடுக்க உள்ளதாகவும், மீட்புப் பணி முடிந்தவுடன், போதிய நிலம் கிடைத்த‌தும் கட்டுமானப் பணிகளை அவர்கள் தொடங்கலாம் என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார். பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சங்க‌ங்கள் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளதாக தெரிவித்த அவர், புலம்பெயர்ந்தோரும், திரைத்துறையினரும் முன்வந்து உதவிகளை வழங்குவதாக கூறினார். திரைப்பட நடிகை நயன்தாரா 20 லட்சம் ரூபாயும், நடிகர் அலென்சியர் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் பட்டியலிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்