மீண்டும் வேகமாக பரவ தொடங்கிய காய்ச்சல் - 60 உயிர்களை கொல்ல அதிர்ச்சி முடிவு
கேரள மாநிலம் ஆலப்புழாவில் மீண்டும் பரவும் பறவைக் காய்ச்சலால் 60 ஆயிரம் பறவைகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் உள்ள வாத்து, கோழி பண்ணைகளில் திடீரென பறவைகள் செத்து மடிந்தன. இதையடுத்து, அந்தப் பறவைகளின் ரத்த மாதிரியை பரிசோதித்ததில் அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து இந்த பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் 60 ஆயிரம் பறவைகளை கொல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் கடந்த ஒரு சில மாதங்களில் கொல்லப்படும் பறவைகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Next Story