ஒரு மாதத்தில் மகளுக்கு மரண தண்டனை... கடைசி வரை மகளுக்காக போராடிய தாயின் சோக கதை

x

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷாப்ரியா என்பவர் ஏமன் நாட்டில் தலோல் அப்டோ மஹ்தி என்ற மருத்துவரின் கிளினிக்கில் செவிலியாகப் பணி புரிந்து வந்தார். அவரின் பாஸ்போர்ட்டை மஹ்தி பறிமுதல் செய்து வைத்திருந்த நிலையில், இந்தியா திரும்பிச் செல்ல பாஸ்போர்ட்டை கேட்ட போது, அந்த மருத்துவர் அதை தர மறுத்தார். பாஸ்போர்ட்டை மீட்க அவர் தலோல் மஹ்திக்கு ஊசி மூலம் மயக்க மருந்தை செலுத்தியுள்ளார். இதில் அந்த நபர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, 2017இல் நிமிஷாப்ரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றால், மஹ்தியின் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தி, இவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஏமன் அரசு கூறியது. இதைத் தொடர்ந்து நிமிஷா பிரியாவின் தாயார் ஏமென் சென்று, மஹ்தி குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் இது தோல்வியில் முடிந்தால், நிமிஷா பிரியாவிற்கு ஒரு மாதத்தில் மரண தண்டனை நிறைவேற்ற ஏமன் அதிபர் உத்தரவிட்டுள்ளார். மகளை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற தாய் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்