பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய கார் - அதிர்ச்சி காட்சிகள்

x

கேரள மாநிலம் கொல்லத்தில் பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய காரை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பெட்ரோல் நிரப்புவதற்காக வந்த கார் ஒன்று, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில், வேகமாக 3 முறை சுற்றி வந்து வெளியேறியது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மதுபோதையில் காரை ஓட்டிய இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, அவரிடமிருந்து காரையும் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்