மீண்டும் சூடுபிடிக்கும் ஹேமா கமிட்டி விவகாரம்..! வெளியான முக்கிய தகவல் | Kerala
கொல்லத்தை சேர்ந்த மேக்கப் கலைஞர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது. கோட்டயம் பொன்குன்னம் போலீசார், மேக்கப் மேலாளர் சஜீவ் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் காஞ்சிரப்பள்ளி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரளா உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது. நான்கு வழக்குகளில் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் கேரளா அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. புலனாய்வுக் குழுவிடம் வாக்குமூலம் அளித்ததற்காக யாரேனும் அச்சுறுத்தப்பட்டாலோ அல்லது தனிப்பட்ட தகவல்களை கசியவிட்டதாக சந்தேகிக்கப்பட்டாலோ, அது குறித்து புகார் அளிக்க நோடல் அதிகாரிகளை நியமிக்குமாறு அரசுக்கு கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.