பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த கொடூரர்கள்.. போலீஸ் செய்த தரமான சம்பவம்
கேரளாவில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு ரயிலில் தப்ப முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
vovt
கேரள மாநிலம், பத்தினதிட்டா மாவட்டம் கோனி பகுதியில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண் பியூட்டிசனாக வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அமீர் உசேன், ராபிக் இஸ்லாம் ஆகியோர் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 20ம் தேதி இளம்பெண் அதே பகுதியில் தனியாக நடந்த சென்று கொண்டிருந்தபோது, அவரை அமீர் உசேன் மற்றும் ராபிக் இஸ்லாம் இருவரும் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில், கோணி போலீசார் இரண்டு வாலிபர்களையும் தேடி வந்த போது, அவர்கள் இருவரும், ஜோலார்பேட்டை வழியாக சென்னை நோக்கி செல்லும் ரயிலில் தப்பிச் செல்வது தெரியவந்தது. கேரள போலீசார் கொடுத்த தகவலின்பேரில், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் தனிப்படை காவல்துறையினர் ரயிலுக்காக காத்திருந்தனர். ஆனால் அந்த ரயிலுக்கு ஜோலார்பேட்டையில் நிறுத்தம் இல்லாததை அறிந்த போலீசார், ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து ரயிலை நிற்க நடவடிக்கை மேற்க்கொண்டனர். ரெயில் நின்றதும் சல்லடை போட்டு தேடிய போலீசார் அந்த இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர். பின்னர் கேரளா காவல்துறையினரை வரவழைத்து அவர்களிடம் இரண்டு வாலிபர்களையும் ஒப்படைத்தனர்.