`சுவாமி சாட்பாட்' செயலி - சபரிமலை செல்லும் பக்தர்களே கண்டிப்பா தெரிஞ்சி வச்சிக்கோங்க
சபரிமலையில் ஐய்யப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் - முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் இணைந்து 'சுவாமி சாட்பாட்' செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த சுவாமி சாட்பாட் செயலி லோகோவை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். விழாவில் தேவசம்போர்டு, அரசு மற்றும் முத்தூட் ஃபைனான்ஸ் நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். பக்தர்கள் பூஜை நேரம், மருத்துவ மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்த தகவல்களை செயலியில் பெற்றுக் கொள்ளலாம். மலையாளம், தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளில் சேவை வழங்கப்படுகிறது.
Next Story