சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வந்த குட் நியூஸ்

x

சபரிமலை வரும் பக்தர்கள் முறைப்படி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என கேரள தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைக்காக வரும் 15 தேதி மாலை நடை திறக்கப்படுகிரது இந்நிலையில், சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவை தவிர, ஆதார் அட்டையுடன் தினமும் வரும் பத்தாயிரம் பேருக்கு கூடுதல் சேர்க்கை வழங்க மூன்று இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்யப்படும் என்றும், இந்த சீசனில் ப்ரீபெய்டு டோலி முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார். பக்தர்கள் நலன் கருதி இந்த சீசனில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்