சபரிமலை மக்களுக்கு வெளியான குட் நியூஸ் | sabarimala | Kerala
கேரள மாநிலம் சபரிமலை சன்னிதானம், பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் 3 மழை அளவீட்டுக் கருவிகளை இந்திய வானிலை ஆய்வு மையம் நிறுவியுள்ளது.அமர்நாத், சார் தாம் ஆகிய யாத்ரீகர்களுக்கு வானிலை ஆய்வு மையம் பிரத்யேக வானிலை முன்னறிவிப்புகளை வழங்கி வருவது போல், சபரிமலையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வழங்கப்படும் எனவும், விரைவில் நிகழ்நேர வானிலை அறிவிப்புகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளை பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்திய வானிலை ஆய்வு மையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் உதவிக்காக சமீபத்தில், 'சுவாமி ஏ.ஐ. சாட் பாட்' என்ற வானிலை முன்னறிவிப்பு செயலியை கேரள அரசும் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது